சுனாமி போன்று எழுந்த பேரலை... தகர்ந்த 3-வது மாடி கட்டிடம்: அலறியடித்து வெளியேறிய மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள டெனரிஃப் தீவில் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் சுனாமி போன்று கடல் அலைகள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

குறித்த வீடியோவில் கடற்கரையில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் மூன்றாவது மாடி வரை கடல் அலைகள் எழுந்து அச்சத்தை ஏற்படுத்துகிறது. 65 குடியிருப்புகளை கொண்ட அந்த அடுக்குமாடியில் சம்பவத்தின்போது 39 பேர் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இரண்டு தளங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.

டெனரிஃப் தீவின் வட பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானாலும், ஆபத்து ஏதும் இல்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

சாண்டா குரூஸ் பகுதியில் இருந்து 52 கி.மீ தொலைவில் அமைந்துள்ள Garichico என்ற இடத்தில் கடல் கொந்தளிப்பால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்