பிஜி தீவில் கடும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

தெற்கு பசிபிக் கடலில் உள்ளது பிஜி தீவில் கடும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக்கடல் பிராந்தியத்தில் உள்ள பிஜி தீவுகள் பூகம்ப அபாய வளையத்தில் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.

இந்நிலையில் 6.7 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் இங்கு உள்ளூர் நேரப்படி காலை 9.25 மணிக்கு உணரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் சுவாவுக்கு கிழக்கே 283 கி.மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 534 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

மேலும் மிக அதிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பூமி குலுங்கியதை தங்களால் பெருமளவு உணர முடியவில்லை எனவும் நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின இருப்பினும் உயிர் சேதம், பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடலுக்கு அடியில் 7.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்