காதலனை பார்ப்பதற்கு காதலி எடுத்து துணிச்சல் முடிவு! விமான நிலையத்தில் நடந்த கண்கலங்க வைக்கும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய காதலனை முதல் முறையாக பார்ப்பதற்கு 5000 மைல் தூரம் விமானத்தில் பறந்து வந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Vikachka Chaya Radaviciute லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த இவரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த Eugene Galang என்ற இளைஞரும் கடந்த 2017-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகம் ஆகியுள்ளனர்.

இதில் முதன் முதலில் Eugene தான் Vikachka-வுக்கு ஹாய் என்று அனுப்பியுள்ளார். அதன் பின் இவர்கள் நாள்தோறும் பேச ஆரம்பித்துள்ளனர்.

முதலில் நண்பர்களாக பேசி பழகிய இவர்கள், நாளைடைவில் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர். இதனால் Vikachka காதலனை பார்க்க முடிவு செய்துள்ளார்.

அவர் ஒரு மூலையில் இருக்கிறார், இவர் ஒரு மூலையில் இருக்கிறார். இரண்டு பேருக்கும் இடையில் 5000-க்கும் அதிகமான மைல் தூரம் இருக்கிறது.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் காதலனை பார்த்தே ஆக வேண்டும் என்று Vikachka பிலிப்பைன்சிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சுமார் 5802 மைல் தூரம் பறந்து சென்ற இவரை, வரவேற்க காதலன் Eugene விமானநிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

காதலியை முதன் முதலில் பார்க்கப்போவதால், எல்லையற்ற உணர்ச்சியில் இருந்தார். இறுதியாக காதலி வந்த போது, தன்னையே அறியாமல் கட்டிப் பிடித்தார். இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த காலத்திலும் இப்படி ஒரு காதல் என்று பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் இதை பார்க்கும் தங்களை அறியாமலே கண்களில் கண்ணீர் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்