தாயை இழந்த யானைக்குட்டியை கவனிக்காமல் பாகன் செய்த செயல்: பதிலடி கொடுத்த யானைக்குட்டியின் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் தன்னைக் கவனிக்காத பாகனிடமிருந்து யானைக்குட்டி ஒன்று செல்போனை பறிக்க முயன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் தான் குறித்த வீடியோ எரிக் கண்டு என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது.

அதில், தாயை இழந்த உலி என்ற குட்டி யானை அருகில் பாகன் உட்கார்ந்து கொண்டு தனது செல்ப்போனில் மூழ்கியிருந்தார்.

இதை கண்டு கோபமடைந்த யானைக்குட்டி தன்னை கவனிக்குமாறு செய்கை செய்தது. ஆனால் அதனை பாகன் கண்டு கொள்ளாததால் பாகனிடமிருந்து செல்போனை பறிக்க முயன்றது.

ஆனால் அவர் செல்போனில் தான் தொடர்ந்து கவனத்தை செலுத்தினார். இதையடுத்து பாகனின் கையை செல்லமாக யானைக்குட்டி கடித்தது.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்