280கிமீ வேகத்தில் மோதி சிதறிய பந்தய கார்: பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி! பதறவைக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
331Shares

சீனாவின் மக்காவு மாகாணத்தில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில், 17 வயதான இளம்பெண் ஏற்படுத்திய கார் விபத்து காண்போர் அனைவரின் நெஞ்சையும் பதற வைக்கும் அளவிற்கு இடம்பெற்றுள்ளது.

சீனாவின் மக்காவு மாகாணத்தில் மகாவ் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டியானது நடைபெற்று வருகிறது.

பார்முலா 3 கார் பந்தய போட்டியின் மூலம் மிகவும் பிரபலமான, ஜெர்மனி சேர்ந்த 17 வயது சோபியா ஃப்ளோரெச் போட்டியில் கலந்து கொண்டு கார் ஓட்டினார்.

280 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த கார், தடம் மாறி ஜப்பான் வீரர் ஷோ சுபோய் கார் மீது பலமாக மோதி அந்தரத்தில் பறந்தது.

வேகமாக தடுப்பில் மோதி நொறுங்கிய காரை பார்த்து பொதுமக்கள் அனைவரும் பதறிப்போனார். உடனே பந்தய தளத்திற்கு விரைந்த பாதுகாவலர்கள் சோபியாவை மீட்டு வேகமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் ஷோ சுபோய், பந்தய அதிகாரி மற்றும் இரு பாதுகாவலர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடைபெற்றது குறித்து நெட்டிசன்கள் பலரும், காயமடைந்தவர்கள் பற்றிய விவரம் கேட்டு இணையதளங்களில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் சோபியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நான் நன்றாக இருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். ஆனால் நாளை (திங்கள்) காலை அறுவை சிகிச்சைக்கு செல்ல உள்ளேன்... விரைவில் மற்ற தகவல்களை தெரிவிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்