விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, காதல் ஜோடியினர் யோகா செய்த செயல் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகள் விமானம் ஒன்று பயணிகளுடன் பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்த ஜோடி திடீரென்று, விமானத்தில் இருக்கு காலி இடம் பகுதியில், யோகா செய்துள்ளனர்.
இதை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோவில் குறித்த ஜோடி மன அழுத்ததை போக்கும் யோக செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற பயணிகளில் சிலர் தூங்கிய நிலையில் இருக்கின்றனர். வீடியோவைக் கண்ட இணையவாசிகள் இது ஒரு கோமாளித்தனமானது, மற்றொருவர் அற்புதமான சர்க்கஸ் காட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிலர் இவர்களை கிண்டல் செய்யும் விதமாக குறிப்பிட்டிருந்தாலும், இது உண்மையில் நல்லது முயற்சி செய்யுங்கள் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
மேலும் அவர் எந்த விமானத்தில் பயணம் செய்தனர், அவர்களின் பெயர் என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.