பொலிஸ் அதிகாரியை கொன்று சமைத்து சாப்பிட்ட தந்தையும் மகனும்: வெளியான அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உக்ரைன் நாட்டில் முன்னாள் பொலிஸ் அதிகாரியின் தலையை வெட்டிய பின்னர், உடலை சமைத்து சாப்பிட்டதாக கூறி இருவரை கைது செய்துள்ளனர்.

கைதான இருவரும் தந்தை மற்றும் மகன் என கூறப்படுகிறது. விசாரணை அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு குப்பைகளுக்கு இடையே இருந்து தலையற்ற உடலை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உக்ரைன் நாட்டின் Saltivka பகுதில் நடந்த இச்சம்பவத்தில், மீட்கப்பட்ட உடலில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததாகவும்,

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அப்பகுதில் குப்பைகளை வீசியது தந்தை மற்றும் மகன் என தெரியவந்தது.

மேலும் அவர்களது குடியிருப்பின் மொட்டைமாடியில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் தலை ஒன்றையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

விசாரணையில், அந்த தந்தையும் மகனும் சேர்ந்து கொலை செய்தது 45 வயது மதிக்கத்தக்க முன்னாள் பொலிஸ் அதிகாரி எனவும் இவர் கடந்த 4 ஆம் திகதியில் இருந்தே மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

கழுத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டே அந்த பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் அதிகாரியை கொன்று அவரது சதை பகுதியை சமைத்து சாப்பிட்டதையும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers