முடக்கப்பட்டிருந்த கடாபி வங்கிக்கணக்கில் இருந்து பில்லியன் டொலர்கள் மாயம்: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று முடக்கப்பட்டிருந்த லிபியா முன்னாள் தலைவர் முயம்மர் கடாபியின் வங்கிக்கணக்கில் இருந்து பல பில்லியன் டொலர் தொகை மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெல்ஜியம் நாட்டில் உள்ள வங்கிகளில் வைப்பு நிதியாக சேமிக்கப்பட்டுள்ள கடாபியின் பணத்திற்கு வட்டி மற்றும் ஈவுத்தொகை வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆராயப்படும் என தெரிவித்துள்ளனர்.

சுமார் 5.7 பில்லியன் டொலர் அளவுக்கு மாயமானதாக கூறும் அதிகாரிகள், கடந்த 2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று லிபியா தலைவர்களின் வெளிநாட்டு வங்கிக்கணக்குகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றனர்.

மட்டுமின்றி வெளிநாடுகளில் லிபியா முதலீடு செய்திருந்த தொகையில் சுமார் 67 பில்லியன் டொலர் அளவுக்கு திறம்பட பறிமுதலும் செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட நடவடிக்கையில் பெயர் குறிப்பிடும்படியான கணக்குகளை மட்டுமே முடக்கியது.

மேலும், கடாபி வங்கிக்கணக்குகளில் இருந்து பில்லியன் டொலர்கள் மாயமானது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றமும் விசாரணை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers