காதலனுக்காக இளவரசி செய்த தியாகம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஜப்பான் இளவரசி ஒருவர் தனது காதலுக்காக இளவரசி பட்டத்தையே துறந்துள்ளார். ஜப்பான் இளவரசியான Ayako சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்ததால் ராஜ சட்டப்படி தனது இளவரசி பட்டத்தையே இழக்க முன்வந்துள்ளார்.

நேற்று எளிமையாக நடைபெற்ற இளவரசியின் திருமணத்திற்கு 1000 நலம் விரும்பிகள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் நடைபெறும் இடத்திற்கு மணமக்கள் வந்ததும், கூடியிருந்த பொதுமக்கள் நீடூழி வாழ்க என பொருள்படும் Banzai என்று குரல் எழுப்பினர்.

28 வயதான இளவரசி Ayako, மன்னர் Akihitoவின் சகோதரரான மறைந்த இளவரசர் Takamodo மற்றும் இளவரசி Hisakoவின் மகளாவார்.

ஜப்பான் சட்டத்தின்படி, ராஜ குடும்ப பெண்கள் ராஜ குடும்பத்தைச் சேராத ஒரு ஆண்மகனை மணந்தால், தங்கள் இளவரசி பட்டத்தை துறக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த சட்டம் ராஜ குடும்ப ஆண்களுக்கு பொருந்தாது.

கப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் Moriya (32) என்னும் சாதாரண குடிமகனை இளவரசி மணக்க இருப்பதால், அவர் தனது பட்டத்தை துறப்பதுடன் அவர் வாழ்க்கை நடத்துவதற்காக அவருக்கு 950,000 டொலர்கள் கொடுத்து அவர் ராஜ குடும்பத்திலிருந்து அனுப்பி விடப்படுவார்.

இன்று நான் ராஜ குடும்பத்தைப் பிரிந்தாலும், ராஜாவுக்கும் ராணிக்கும் என்றும் உண்மையுடன் இருப்பேன் என்று கூறியுள்ள இளவரசி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை எண்ணும்போது மிக்க ஆச்சர்யமடைகிறேன் என்றார்.

இந்நிலையில் அரசாளும் உரிமை ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் கொடுக்கப்படுவது குறித்தும், ஆட்சியில் சாதாரண குடிமகனை மணக்கும் பெண்களின் பங்கு குறித்தும் கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers