ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை குத்திக்கொன்ற தாய்: கதவை திறந்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பெலாரஸ் நாட்டில் மதுபோதையில் ஆண் நண்பருடன் சேர்ந்து, பெற்ற குழந்தையை தாயே கொலை செய்துள்ள கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.

பெலாரஸ் நாட்டை சேர்ந்த லியோனிட் (28) - நடாலியா (25) தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோனிட் தன்னுடைய இரண்டு மகன்களை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த லியோனிட், தன்னுடைய மகள் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், நடாலியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், நடாலியா மதுபோதையில் தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவருடன் சேர்ந்து குழந்தையின் தலையில் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தரப்பு தெரிவிக்கையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடாலியாவிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். அதேசமயம் அவருடைய 47 வயதான நண்பர் விக்டர்க்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனதெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers