189 பேரை பலிகொண்ட இந்தோனேஷிய விமான விபத்து: இதுவரை 10 உடல்கள் மட்டுமே முழுமையாக கிடைத்துள்ளதாக தகவல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

189 பேரை பலிகொண்ட இந்தோனேஷிய விமான விபத்தில் பலியானவர்களில் இதுவரை 10 பேரின் உடல்கள் மட்டுமே சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவ இடத்திலிருந்து இதுவரை உடல்களை வைக்கும் 24 பைகள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் அவற்றில் ஒவ்வொரு பையிலும் மூவருக்கு மேற்பட்டோரின் உடல் பாகங்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் குழந்தை ஒன்றின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விமானத்தில் பயணித்த அனைவரின் உடல்களையும் கண்டுபிடிப்பது கடினம் என இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணி மிக விரைவாக நடந்து வருவதாக Muhammad Syaugi என்னும் மீட்புக் குழு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்