நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

வட நியூசிலாந்திலுள்ள தலைநகர் விலிங்டனில் 6.1 றிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் (USGS) மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு கடற்கரையில் 227 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் (உள்ளூர் நேரம் 3:13 மணிக்கு) பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது, மேற்கிலுள்ள நியூபொலிமத் நகரின் நிலத்தடியில் 63 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்கம் உருவான நகரத்திற்கு வடகிழக்கில் 31 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தவுமருனு நகரில் நிலநடுக்கத்தை சிறிய அளவில் உணர்ந்ததாக வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் கென் வீலர் தெரிவித்துள்ளார்.

குறித்த அதிர்வை ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அமைர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதோடு தலைநகர விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதன் போது எந்தவிதமான சேதங்களும் பதிவிடப்படவில்லையென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...