விமானத்தின் மீது கொண்ட தீராத ஏக்கம்! வெறித்தனமாக சாதித்து காட்டிய ஏழை விவசாயி பெண்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் விவசாயி ஒருவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவறாததால், அவர் தானாகவே சொந்தமாக விமானம் ஒன்றை தயாரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஜுயூ என்பவர் பல ஆண்டுகளாக வெங்காயம், பூண்டு போன்ற விளைச்சல் செய்யும் விவசாயியாக இருந்து வருகிறார்.

இவருக்கு சிறுவயதிலிருந்தே, தனக்கென்று விமானம் ஒன்று வாங்கி அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

ஆனால் அதன் ஆசை நிறைவேறாத காரணத்தினால், பின் நாட்களில் அது ஒரு ஏக்கமாக இருந்துள்ளது.

பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்துள்ள ஜூ, பல வருடங்களாக விமானம் வாங்க வாய்ப்பு வருமா என்று காத்திருந்தார். ஆனால் சந்தர்பங்கள் கைக்கொடுக்காத காரணத்தால், ஒரு முடிவு எடுத்தார்.

ஜு விவசாயம் செய்துக் கொண்டிருந்த போதே சீனாவின் கையூன் என்ற பகுதியில் இருக்கும் தொழிற்சாலை ஒன்றில் வெல்டிங் வேலையும் செய்து வந்திருந்தார்.

இதனால் வெல்டிங் வேலையெல்லாம் ஈஸியாக இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு வயது கூடிக் கொண்டே சென்றதால், இவரின் விமானம் ஆசையும் அதிகரித்தது. காத்திருந்தால் கனவு நிறைவேறாது என நினைத்த இவர் களத்தில் இறங்க வேண்டியது தான் என்று முடிவெடுத்தார்.

வெல்டிங் வேலைக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் முதலில் வாங்கி வந்தார். பின்னர் பல விமானங்களின் புகைப்படங்களை சேகரித்து விமானத்தின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சி நடத்தினார். அதன் பின்பு, சொந்தமாக விமானத்தை உருவாக்க வேண்டும் என்ற முடிவு செய்தார்.

இதற்காக தன்னுடைய கோதுமை விவசாய நிலத்தை விமான உருவாக்க சீர் செய்தார். இதுவரை சேகரித்து வைத்திருந்த 3,74,000 அமெரிக்க டாலர்களை கொண்டு சுமார் 60 டன் இரும்பு, மற்றும் உதிரி பாகங்கள் அனைத்தும் வாங்கினார். படிப்படியாக விமானத்தை உருவாக்கத் தொடங்கினார்.

ஜூவின் மன உறுதியைக் கண்ட அவரின் நண்பர்கள் 5 பேர் உதவ முன்வந்தனர். நேரம் காலம் பார்க்காமல் உழைத்த ஜூ யூ அவரது சொந்த விமானத்தை பிரம்மாண்டமாக கட்டி முடித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், நடுத்தரக் குடும்பத்தில் பிறந்ததால் என்னால் விமானத்தில் பயணிக்க முடியாது என நான் உணர்ந்தேன். விமானத்தில் பறக்க முடியாவிட்டாலும் என்னால் சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்க முடியும் என்று நம்பிக்கையால் இதை செய்துள்ளேன்.

என் விமானம் அரைகுறையாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உடனடியாகப் பறக்காது. இதை நான் உணவகமாக மாற்ற உள்ளேன். என் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பேன்.

இங்கு வரும் அனைவரும் தங்களை ஒரு எஜமானர்கள் போல் உணர வேண்டும். என் விமானம் பசியால் தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் இடமாக விரைவில் மாறும் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers