காதலனுடன் நெருக்கமாக இருந்த முஸ்லிம் பெண்ணுக்கு பொதுமக்கள் மத்தியில் கொடுக்கப்பட்ட தண்டனை

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் காதலனுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்த பெண்ணுக்கு, பொதுமக்கள் மத்தியில் வைத்து பிரம்படி கொடுக்கப்பட்டது.

இஸ்லாமிய ஷரியா சட்டப்படி, மது அருந்துதல், ஓரினசேர்க்கை மற்றும் தகாத உறவு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

225 மில்லியன் முஸ்லீம் மக்களை கொண்ட இந்தோனேசியாவில் மட்டும் தான் ஷரியா சட்டம் முழுமையாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் காதலனுடன் நெருக்கமாக இருந்த 21 வயது பெண்ணுக்கு பொதுமக்கள் மத்தியில் வைத்து பிரம்படி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இளம்பெண்ணின் காதலனுக்கும் மக்கள் மத்தியிலே பிரம்படி கொடுக்கப்பட்டது.

பொதுவாக இதுபோன்ற குற்றங்களுக்கு 10 முதல் 25 பிரம்படி கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers