189 பேருடன் விபத்தில் சிக்கிய இந்தோனேசிய விமானம்: ஒட்டி சென்ற இந்திய விமானிக்கு நேர்ந்த சோகம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தை ஒட்டியது இந்தியாவை சேர்ந்த விமானி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் செயல்பட்டு வரும், போயிங் 737 மேக்ஸ் 8 வகையை சேர்ந்த லையன் ஏர் பயணிகள் விமானம், 189 பேருடன், தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் தீவு நோக்கி புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட 13 நிமிடங்களில் திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து மாயமானது.

ஒரு சிறுவன், 2 கைக்குழந்தைகள் உட்பட 181 பயணிகள் மற்றும் 8 விமான பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட மீட்பு படையினர், விமானம் கடலில் மூழ்கியிருந்ததை கண்டறிந்தனர்.

இதில் பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் விமானத்தை ஓட்டிச்சென்ற இரு விமானிகளின் ஒருவர், டெல்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த பாவ்யே சுனேஜா (31) என்பது தெரியவந்துள்ளது.

2011-ம் ஆண்டு லயன் ஏர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுனேஜா, விரைவில் இந்தியாவிற்கு திரும்ப இருந்ததாகவும், வேறு ஒரு விமான நிறுவனத்தில் பணிக்கு சேர இருந்ததாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers