முன்னரே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு: இந்தோனேசியா விபத்தில் சிக்கிய விமானம் குறித்து அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் கடலில் வீழ்ந்த விமானத்தில் முந்தைய பயணத்தின் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

நாட்டின் தலைநகர் ஜகர்டாவில் இருந்து பங்கல் பினாங்குக்கு புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்தின் Boeing 737 Max 8 ரக பயணிகள் விமானம் புறப்பட்ட 13வது நிமிடத்தில் மாயமானது.

இதையடுத்து விமானம் கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த 189 பயணிகளின் நிலை என்னவென இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில் குறித்த விமானம் இதற்கு முன்னர் Denpasar நகரிலிருந்து ஜகர்டாவில் உள்ள Cengkareng-க்கு பறந்துள்ளது.

அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் நடைமுறைப்படி சரி செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை லயன் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எட்வர்ட் கூறியுள்ளார்.

இந்த விபத்துக்கும் முன்னர் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்படவுள்ளது.

லயன் நிறுவனம் Boeing 737 Max 8 ரக விமானம் உட்பட அதே மொடலில் 11 விமானங்களை வைத்துள்ளது.

இந்த விபத்து காரணமாக மற்ற விமானங்களின் இயக்கம் நிறுத்தப்பட மாட்டாது என எட்வர்ட் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers