இது இந்தோனேஷியா சந்தித்த 98ஆவது விமான விபத்து: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இன்று காலை 189 பயணிகளுடன் இந்தோனேசிய விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியுள்ள நிலையில், இது இந்தோனேஷியா சந்திக்கும் 98ஆவது விமான விபத்து என ஆய்வு ஒன்றின் முடிவுகள் அதிர்ச்சி தகவல்வெளியிட்டுள்ளன.

உலகம் முழுவதிலும் ஏராளமானோர் விமானங்களில் பயணிக்கும் நிலையில் விமானங்கள் பல விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பிரபல ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றின் முடிவுகள், இது இந்தோனேஷியா சந்திக்கும் 98ஆவது விமான விபத்து என தெரிவித்துள்ளதோடு இதுவரை உலகில் எந்தெந்த நாடுகளில் எத்தனை விமான விபத்துகள் நடந்துள்ளன என்னும் புள்ளி விவரத்தையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி மிக அதிக விமான விபத்துகளை சந்தித்துள்ள நாடு அமெரிக்காவாகும், அது 829 விமான விபத்துகளை சந்தித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ரஷ்யா 521 விமான விபத்துகளையும், பிரேஸில் 188 விபத்துகளையும், கொலம்பியா 182 விபத்துகளையும், கனடா 179 விபத்துகளையும் சந்தித்துள்ளன.

பிரித்தானியா இதுவரை 104 விமான விபத்துகளையும் பிரான்ஸ் 104 விபத்துகளையும் கண்டுள்ளன.

இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானம் இதற்குமுன் பயணிக்கும்போது அதில் ஒரு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அது பின்னர் சரி செய்யப்பட்டதாகவும் Lion Air CEO தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers