ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணைய தலைமையகம் அருகே குண்டு வெடிப்பு

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் அருகே நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் வரை காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தைக் குண்டு வெடித்துத் தகர்க்கும் எண்ணத்துடன் உடலில் பொருத்திய குண்டுகளுடன் வந்த ஒருவர் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளார் என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலக ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் நான்கு அலுவலக ஊழியர்களும் இரண்டு காவல்துறையினரும் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers