முத்துக்கள் பதித்த ஆணுறை: உலகை உலுக்கிய கொலையில் வெளியான உண்மை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்காவின் ஸ்டெலன்போஷ் பகுதியில் 4 பேர் கொண்ட கும்பல் 21 வயது மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த பின்னர் கொடூரமாக கொலை செய்த வழக்கில் அதிரடி திருப்பம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் நண்பர்களுடன் நின்றிருந்த ஹன்னா கொர்னேலியஸ் என்ற மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தியது.

பின்னர் பாறாங்கல் பயன்படுத்தி குறித்த மாணவியின் தலையை சிதைத்து கொலை செய்தனர்.

ஜெரால்டோ பார்ஸன்ஸ்(27), வெர்னான் விட்போய்(33), நஷ்வில்லி ஜூலியஸ்(29), மற்றும் ஈபேன் வான் நெபெர்ஸ்க்(28) ஆகிய நால்வருமே முக்கிய குற்றவாளிகள்.

மாணவி ஹன்னாவை கொன்றதற்கும் அவரது காதலனுக்கு எதிராக மேற்கொண்ட கொலை முயற்சிக்கும் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் நீதிமன்றம் நால்வரையும் விடுதலை செய்தது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெரால்டோ பார்ஸன்ஸ் நீதிமன்றத்தில் வெளியிட்ட தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சம்பவத்தன்று தமது ஆண்றுப்பில் முத்துக்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆணுறை ஒன்றை பயன்படுத்தியதாகவும்,

அது தமது யூத கலாச்சாரத்தின் ஒருபகுதி எனவும், பாலியல் உறவில் அதிக இன்பம் கிடைக்க தாம் அதை பயன்படுத்தியதாகவும் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

கூட்டு பலாத்காரத்திற்கு பின்னர் மாணவி ஹன்னாவை கடுமையாக தாக்கியதாகவும் பாறாங்கல் பயன்படுத்தி கொடூரமாக கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நண்பர்கள் மூவரும் நிர்பந்தித்த காரணத்தாலையே ஒரு சிறுவனுக்கு தந்தையான தாம் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாகவும் பார்ஸன்ஸ் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 3.40 மணியளவில் சொந்த குடியிருப்பின் அருகே காரை நிறுத்திவிட்டு இறங்கிய ஹன்னாவை இந்த நால்வர் கும்பல் கடத்தியது.

ஹன்னாவுடன் இருந்த அவரது காதலனை தாக்கிவிட்டு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணமும் கொள்ளையிட்டுள்ளனர்.

முதலில் ஹன்னாவை தாம் பலாத்காரம் செய்ததாகவும், அதன் பின்னரே நண்பர் மூவரும் கற்பழித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பலாத்காரத்திற்கு பின்னர் அவரை விட்டுவிடுவதாக நாலவரும் முதலில் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் எஞ்சிய மூவரும் இறுதியில் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும்,

அதன் பின்னரே அவரை கத்தியால் குத்தியதும், கல்லால் தலையை சிதைத்தும் என பார்ஸன்ஸ் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

சம்பவம் நடந்த அடுத்த நாள் காலை சுமார் 8.30 மணியளவில் ஸ்டெலன்போஷ் பகுதியில் இருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் சாலை ஓரத்தில் இருந்து ஹன்னாவின் உடல் மீட்கப்பட்டது.

அவரது உடலில் பலமுறை கத்தியால் தாக்கியதன் காயங்கள் இருந்தது. தற்போது பார்ஸன்ஸ் தங்களது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதால் இந்த வழக்கை மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...