எக்ஸ்ரே இயந்திரத்தில் இருந்து வெளிவந்த சிறுவன்......பதறிப்போன தந்தை: வைரல் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில், காணமல் போன சிறுவன் திடீரென எக்ஸ்ரே இயந்திரத்தில் வெளிவந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த ஒரு தந்தை தன்னுடைய மகனுடன் ஜியோலன் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தந்தையை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். சோதனை முடிந்ததும் திரும்பி பார்த்த தந்தை தன்னுடன் வந்த மகன் மாயமாகியிருப்பதை அறிந்து பதறியுள்ளார்.

அங்கு அவர் கூச்சலிட ஆரம்பித்த சில நிமிடங்களில், சிறுவன் எக்ஸ்ரே இயந்திரத்தில் இருந்து வெளியில் வந்துள்ளான்.

இந்த சம்பவமானது கடந்த 9-ம் தேதியன்று நடைபெற்றுள்ளது. ஆனால் இணையத்தில் வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் ஆச்சர்யாமாக வீடியோவை பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...