அமெரிக்காவுக்கு இது ஆபத்தானது! எச்சரிக்கும் ரஷ்யா

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது என்பது அமெரிக்காவிற்கு ஆபத்தான நகர்வு என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா-ரஷ்யா இடையே ஆயுதப் போட்டிக்கான பனிப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில், 1987ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அணு ஆயுத ஒப்பந்தத்தில் வெளியேறப்போவதாக அறிவித்துள்ளார்.

ஏனெனில், ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை மீறி வருவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டினார். டிரம்பின் இந்த அறிவிப்பு உலகளவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது என்பது அமெரிக்காவிற்கு ஆபத்தான நகர்வு என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜெய் ரியாப்காவ் கூறுகையில், ’இது அமெரிக்காவிற்கு மிகவும் ஆபத்தான நகர்வாக இருக்கும். இதனை உலக நாடுகளால் புரிந்துகொள்ள முடியாது, தீவிர கண்டனங்கள் எழும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...