உலக நாடுகளை தலைகுனிய வைக்கும் புகைப்படம்!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கொடிய பஞ்சத்தை யேமன் நாடு எதிர்நோக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அங்குள்ள சுமார் 13,000,000 அப்பாவி மக்கள் கடும் பட்டினியால் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்களின் புகைப்படங்கள் உலக நாடுகளை கண்டிப்பாக தலைகுனிய வைக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் கண்கலங்கியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சவுதி அரேபிய அரசால் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலில் தொடங்கி, யேமன் நாடு உளநாட்டு போரால் சின்னாபின்னமாகி வருகிறது.

எத்தியோப்பியா, வங்காளம், சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் எதிர்கொண்ட கொடிய பஞ்சத்தைவிடவும் யேமன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உலக நாடுகள் முன்வந்தால் யேமன் நாட்டில் எஞ்சிய 12 முதல் 13 மில்லியன் மக்களை பட்டினியில் இருந்து காக்க முடியும்.

ஆனால் சவுதி அரேபியாவுக்கு பயந்தே எந்த வல்லரசு நாடுகளும் யேமன் விவகாரத்தில் தலையிட அஞ்சுவதாக கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவை பகைத்துக் கொண்டால், நாளை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 400 டொலர் என அதிகரித்தாலும் வியப்பதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஐக்கிய நாடுகள் மன்றமும் மனித உரிமை ஆர்வலர்களும் சவுதி அரேபியாவின் தொடர் வான்வழி தாக்குதலை கண்டித்து வருகின்றனர்.

யேமன் நாட்டின் ஹொடிடா மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி 170 பேர் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 1,700 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அப்பகுதியில் இருந்து 425,000 பேர் உயிர் பயத்தில் வெளியேறியதாகவும் யேமன் நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் மன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்டு மாதம் மட்டும் டசின் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒரே ஒரு வாரத்தில் மட்டும் குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெரும்பாலான மக்கள் போதிய உணவு இன்றியும், தேவைக்கு குடிநீர் அருந்தாமலும் பரிதாபமான நிலையில் காட்சியளிப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

போதிய ஊட்டச்சத்து இன்றி குழந்தைகள் பலர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் 3 மாதங்கள் இதே நெருக்கடி நீடிக்கும் எனில் யேமனில் மிஞ்சியுள்ள 13 மில்லியன் மக்கள் பட்டினியால் சாக நேரிடும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...