புற்றுநோய்க்கு எதிரான புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு: நோபல் பரிசு வழங்கி கௌரவிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்

2018 இற்கான மருத்துவத் துறைக்கான நோபல்பரிசை அமெரிக்க பேராசிரியர் James P Allison உம், ஜப்பான் நாட்டு பேராசிரியர் Tasuku Honjo உம் கைப்பற்றியுள்ளனர்.

இம்முறை புற்றுநோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்டிருந்த சிகிச்சை முறைக்காகவெனவே இந் நோபல்பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக நமது உடலிலுள்ள நோயெதிர்ப்புத் தொகுதியானது ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கவென அமைக்கப்பட்டுள்ள தொகுதியாகும்.

எனினும் இது நமது உடல் கலங்களுக்கு எதிராகத் தொழிற்படும் ஆற்றலற்றைவை.

ஆனால் இவ்விரு விஞ்ஞானிகளும் நமது நோயெதிர்ப்புத் தொகுதியைப் பயன்படுத்தி புற்றுநோயைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியமைக்காகவே தற்போது நோபல்பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

தமது 70களில் வாழும் இவர்கள் நோயெதிப்புக் கலங்களின் செயற்பாட்டைத் தடுக்கும் குறித்த புரதத்தை செயலற்றதாக்கி, புற்றுநோய்க் கலங்களை அழித்தொழிக்கும் முறையை அறிமுகப்படுத்தியிருந்தனர்

இச் சிகிச்சை முறை மூலம் வருங்காலத்தில் ஏராளமானோரை புற்றுநோய்த் தாக்கங்களிலிருந்து மீளவைக்க முடியும் என இவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இக் கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு 1.01 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்