ஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு: பலர் உயிரிழப்பு

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலின் போது இரண்டு குண்டு வெடிப்புக்கள் நடந்ததாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளார் நஸ்ரத் ராஹிமி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் காபூல் நகரில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்ற போது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர் என அதிகாரிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்ட பள்ளியில் வெடிகுண்டு வெடித்ததும் என்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடிவந்துவிட்டேன்,” என ஒருவர் கூறியுள்ளார் அதுமட்டுமின்றி அங்கு பலர் உயிரிழந்து உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்