புதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில் முஸ்லீம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் முக்காடு அணிந்திருந்த முஸ்லீம் பெண்ணை வேலையை ராஜினாமா செய்யுமாறு மேலதிகாரி வறுபுறுத்தியுள்ள துயர சம்பவம் நடந்துள்ளது.

கராச்சியில் இயங்கி வரும் ஐடி கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்ந்த இளம்பெண், முக்காடு அணிந்து கொண்டு வேலை செய்துள்ளார்.

இதனை பார்த்த மேலதிகாரி, 'தலையில் முக்காடு அணிந்தால் பணியில் தொடர முடியாது. இது பணியிடத்தில் அனைவரையும் தர்ம சங்கடப்படுத்தும். இதனால் அலுவலகத்தின் பெயர் பாதிக்கப்படும்' என கூறியதோடு, வேலையை விட்டு நீங்கினால் வேறு இரண்டு வங்கிகளில் வேலை பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, நிறுவனத்தின் சிஇஓ அனைத்து தவறுகளுக்கும் தான் பொறுப்பேற்று கொள்வதாகவும், அந்த பெண்ணின் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதாகவும் அறிவித்தார்.

ஆனால் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு குறையாமல் இருந்ததால், சிஇஓ ஜவாத் காதிர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து நிர்வாகத்தின் இயக்குனர் குழு கூறுகையில், சம்மந்தப்பட்ட சிஇஓ மற்றும் மேலதிகாரி இருவரும் தற்போது பணியில் இல்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்