தடைகளை தவிர்க்க வடகொரியா செயல்படுவது இப்படிதான்

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

வடகொரியா ஐநாவின் தடைகளை முறியடித்து செயல்பட்டு வருகிறது.

அந்நாட்டின் அணு ஆயுத திட்டத்தை கைவிட அழுத்தம் கொடுப்பதற்காக இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நிலக்கரி, எண்ணெய் போன்ற முக்கிய மூலவளங்களை வாங்க, வடகொரிய அரசு வேறு வழிகளை கண்டறிந்துள்ளது.

வடகொரியா பொருளாதாரத் தடைகளை எவ்வாறு தவிர்க்கின்றது?

இந்த சட்டபூர்வமற்ற வர்த்தகத்தில் பல கடலில் நடக்கின்றன.

வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மற்றும் வடகொரிய கப்பல்களுக்கு இடையில் பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி பரிமாற்றங்களில் பெரும் அதிகரிப்பு காணப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.

சர்வதேச தடைகளால் தடுக்கப்பட்டுள்ள இந்த மூலவளங்களை இறக்குமதி செய்ய வட கொரியாவிக்கு இது உதவுகின்றது.

எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாக 20க்கு மேற்பட்ட வடகொரிய கப்பல்கள் ஐநாவின் தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

எண்ணெய் கப்பல் செயல்பாட்டை நிறுத்தியும் உண்மையான அடையாளத்தை மறைத்தும் இது நடைபெறுகிறது.

இந்த தடைகளை மீறும் நிறுவனங்களை வெளிப்படுத்த அமெரிக்காவும் பிற நாடுகளும் விரும்புகின்றன..

இத்தகைய தடைகள் ஏற்படுத்தும் பாதிப்பை அளவிட முடியுமா?

இந்த தடைகளால் வடகொரியாவின் 2017ம் ஆண்டு வருவாயில் ஒரு பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுளள்ளது.

சட்டபூர்வமற்ற வர்த்தகம் மூலம் 200 மில்லியன் டாலருக்கு மேலாக இந்நாடு சம்பாதித்துள்ளதாக கருதப்படுகிறது.

கிம் ஜாங் - உன்னுடன் நடத்திய பேச்சுவார்த்தையால் வடகொரியா மீதான தடை எதிர்காலத்தில் நீக்கப்படலாம் என்றும் பிரதிபலனாக வடகொரிய அணு ஆயுத லட்சியங்ளுக்கு முடிவு காணும் ஒப்பந்தம் எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான தடைகள் இருக்கும் நிலையிலும் வடகொரியா சமாளிக்கும் பிற வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.

- BBC - Tamil

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...