மாயமான மலேசிய விமானத்தை இந்த நாட்டில் பார்த்தேன்: சம்பவ இடத்துக்கு விரைந்த நபர்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

2014-ல் மாயமான மலேசிய விமானத்தை கம்போடியா நாட்டில் கூகுள் மேப் உதவியுடன் பார்த்ததாக கூறிய நபர் சம்பவ இடத்துக்கு தனது சகோதரருடன் விரைந்துள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி MH370 ரக விமானம் கடந்த 2014 மார்ச் மாதத்தில் 227 பயணிகளுடன் சென்றது.

இந்நிலையில் விமானமானது திடீரென மாயமானது.

கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு நாடுகள் விமானத்தை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தேடும் பணி நிறுத்தப்பட்டது.

விமானமானது இந்திய பெருங்கடலில் மூழ்கியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் கணித்தார்கள்.

இந்நிலையில் வீடியோ தயாரிப்பாளரான இயன் வில்சன், கம்போடியா நாட்டில் உள்ள வனப்பகுதியில் MH370 விமானத்தை கூகுள் மேப் மூலம் பார்த்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து வில்சன் தனது சகோதரர் ஜாக்குடன் கம்போடியாவின் தலைநகர் Phnom Penhக்கு வந்துள்ளார்.

தற்போது Kampong Speu மாகாணத்தில் உள்ள விடுதியில் இருவரும் தங்கியுள்ளனர்.

இதன்பின்னர் Chrok La Eang நீர்வீழ்ச்சிக்கு சென்று தங்கள் ஆராய்ச்சியை வில்சன் தொடரவுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்