கண்களுக்கு இடையில் துப்பாக்கியால் சுடு: இணையத்தை அதிரவைத்த வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

நமீபியா நாட்டில் வேட்டையாளர்கள் இரண்டு பேர் இரக்கமில்லாமல், யானை கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு நமீபியா பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் மர்ம நபர்கள் இரண்டு பேர் யானை கூட்டத்தினை நோக்கி துப்பாக்கியால் சுடுகின்றனர்.

அதில் ஒரு நபர், கண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் துப்பாக்கியால் சுடுமாறு அறிவுறுத்திகிறார். அதனை கேட்டுக்கொண்டு மற்ற நபரும் துப்பாக்கியால் சுடுகிறார்.

வீடியோவை காண..

இதில் நிலைகுலைந்த அந்த பெரிய யானை தடுமாறி தரையில் விழ, பயத்தில் மற்ற யானைகள் பிளிற ஆரம்பிக்கின்றன. அதில் ஒரு பெரிய யானை மட்டும் வேட்டையாளர்களை நோக்கி விரட்ட ஆரம்பிக்கிறது.

உடனே அந்த வேட்டையாளர்கள் அங்கிருந்து வேகமாக தப்பி செல்ல முயற்சிக்கின்றனர். இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் வீடியோ குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் பேசியிருக்கும் தொழில்முறை வேட்டையாளர் Corne Kruger, இந்த வீடியோ மூன்று, அல்லது நன்கு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்கலாம். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் உரிமம் எதுவும் வைத்திருக்க தேவையில்லை. மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரை உள்ள சீசனில் அனுமதி பெற்று தான் இந்த சம்பவங்கள் நிகழ்கின்றன. அப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வருடத்திற்கு இரண்டு யானைகள் மட்டுமே வேட்டையாடப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்