கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்த கொடூரம்: 40 வயது பெண் நடத்திய நாடகம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ள சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana da Silva என்ற 23 வயது இளம் கர்ப்பிணி பெண் வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார், இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Angelina Rodrigues என்ற பெண்ணை கைது செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், Mara Cristiana da Silva என்ற பெண் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அப்போது இவருக்கு Angelina Rodrigues என்ற பெண் உதவியாக இருந்துள்ளார். பணம் போன்றவைகள் எல்லாம் கொடுத்து உதவியுள்ளார்.

ஆனால் Angelina Rodrigues-க்கு குழந்தை என்றால் மிகவும் பிடிக்குமாம். இந்நிலையில் சம்பவம் நடத்த தினத்தன்று Mara Cristiana da Silva மது அருந்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது Angelina Rodrigues இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்துள்ளார். அதன் பின் கத்தியால் அவரின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை எடுத்துள்ளார். இதில் Mara Cristiana da Silva உயிரிழந்துள்ளார்.

அதன் பின் Angelina Rodrigues குழந்தையை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இது தனக்கு பிறந்த குழந்தை என்று அங்கிருக்கும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் குழந்தை பெற்ற பெண் போன்று இல்லாமல் Angelina Rodrigues சாதரணமாக நடந்து வந்ததால், மருத்துவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே பொலிசார் Angelina Rodrigues-ஐ கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

Mara Cristiana da Silva-ன் கணவர் மீதும் பொலிசாருக்கு சந்தேகம் இருப்பதால், அவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வெளியில் எடுக்கப்பட்ட குழந்தை Patos de Minas பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் பத்திரமாக சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் Angelina Rodrigues கர்ப்பம் இல்லை என்பது தெரியவந்துள்ளதால், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று பொலிசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் Angelina Rodrigues கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினாரா அல்லது தோழியா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்