கர்ப்பிணி பெண்ணுக்கு ஆபரேஷன் செய்யுமாறு மருத்துவரை புரட்டி எடுத்த கணவன், மகள்... வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் கர்ப்பிணி மனைவிக்கு ஆபரேஷன் செய்ய மறுப்பு தெரிவித்த மருத்துவரை, கணவனும், மகளும் சேர்ந்து புரட்டி எடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

சீனாவின் பெய்ஜிங்கில் Zheng (46) என்பவர் பிரசவ வழியால் துடித்த தன்னுடைய மனைவியை Peking பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் He Yingdong, உங்களுடைய மனைவிக்கு சுக பிரசவம் ஆகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணியான சன் ஏற்கனவே 44 வயதை அடைந்துவிட்டதாலும், நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாலும், அவருடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடலாம் என கணவர் Zheng பெரிதும் பயந்துள்ளார்.

தன்னுடைய மனைவிக்கு ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுத்தால் எந்த சிரமமும் இருக்காது. அவளுக்கு வலியும் தெரியாமல் இருக்கும் என மருத்துவரிடம் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத மருத்துவர் அதை பற்றி விளக்கம் கொடுக்கும்போது ஆத்திரமடைந்த Zheng, மருத்துவரை சரமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளார்.

இதனை பார்த்த கல்லூரி மாணவர்கள் உடனடியாக விரைந்து வந்து அவர்கள் அனைவரையும் விலக்கி விட முயற்சித்தனர். இதில் தந்தைக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்த அவருடைய 19 வயது மகள், மீண்டும் மருத்துவரை தாக்க ஆரம்பித்தார்.

இந்த சம்பவம் மருத்துவமனை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மறுநாளே அவருடைய மனைவிக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. அதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

சன் மற்றும் குழந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதால், தற்போது Zheng-ஐ கைது செய்யாமல் பொலிஸார் ஒத்தி வைத்துள்ளனர். அதேசமயம் கைது செய்யப்பட்ட Zheng-ன் 19 வயது மகள் கல்லூரியில் படித்து வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்கி அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்