கிரைமியா கல்லூரியில் பயங்கர குண்டு வெடிப்பு: பத்துக்கும் மேற்பட்டோர் பலி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கிழக்கு கிரைமியா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர், ஏராளமானோர் காயமடைந்தனர்.

கெர்ச் என்னும் பகுதியில் உள்ள கல்லூரியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

முதலில் கேஸ் குண்டு வெடிப்பாக இது இருக்கலாமென கருதப்பட்ட நிலையில், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என கிரெம்ளின் வட்டாரம் கருதுகிறது. குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என தெரியவந்துள்ளது.

2014ஆம் ஆண்டு உக்ரைனிடமிருந்த கிரைமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது மேற்கத்திய நாடுகள் அதன் மீது தடைகள் விதிக்க காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்