பாகிஸ்தானையே உலுக்கிய கொடூர சம்பவம்: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
310Shares

பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததோடு, 8 சிறுமிகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளிக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்றி நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் கடந்த ஜனவரி மாதம் சாய்நாப் அன்சாரி என்ற 7 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடுரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளி முகம்மது இம்ரான் அடுத்த 3 நாட்களில் கைது செய்யப்பட்டான். பின்னர் அவனிடம் நடத்தபட்ட விசாரணையில் ஏற்கனவே 8 சிறுமிகளை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக, தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும், அது பொதுமக்கள் மத்தியில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

வழக்கினை விசாரித்த நீதிபதி, தூக்கு தண்டனைக்கு உத்தரவிட்டனர். ஆனால் பொது வெளியில் நிறைவேற்றப்படுவதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை நீதிபதி மற்றும் மருத்துவர் முன்னிலையில் குற்றவாளி முகம்மது இம்ரானுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் சிறப்பு சாட்சியாக சிறுமியின் தந்தை முகமது அமின் அன்சாரி அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து பேசிய அவர், என்னுடைய மகள் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் எங்களுக்கு நீதி கிடைத்துவிட்டது என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என கூறியதோடு, நீதிபதிகளுக்கு தன்னுடைய நன்றியினை தெரிவித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்