கர்ப்பிணி பெண்ணை கதற கதற காலால் மிதித்த தேசிய பாதுகாவலர்கள்: அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
159Shares

ரஷ்யாவில் உள்ள பல்பொருள் அங்காடி நிறுவனத்தில் பல்பு திருடியதாக கூறி கர்ப்பிணி பெண்ணை தேசிய பாதுகாப்பு படையினர் காலால் மிதித்து தாக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரஷ்யாவின் Irkutsk பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஐரினா என்ற கர்ப்பிணி பெண் தன்னுடைய கணவருடன் பல்பு வாங்க சென்றுள்ளார்.

வாங்கி முடித்ததும், அதற்கான தொகையை செலுத்திவிட்டு தன்னுடைய பையில் வைத்துள்ளார்.

ஆனால் இன்னும் பணம் செலுத்தவில்லை என கடையின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தேசிய பாதுகாப்பு படையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினரிடம், கர்ப்பிணி பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பாதுகாப்பு படையினர் கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் தரையில் தள்ளி காலால் தொடர்ந்து மிதித்துள்ளனர். இதில் அந்த பெண் கதறி அழுகிறார். அந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையில் பாதுகாப்பு படையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கர்ப்பிணி பெண் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது எனவும், அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்