உதவி கேட்பதுபோல் நீதிபதியின் மகளை கொடூரமாக தாக்கி துஸ்பிரயோகம் செய்த அரக்கர்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
150Shares

தென் ஆப்பிரிக்காவில் உதவி கேட்பதை போல நடித்து மர்ம கும்பலை சேர்ந்த 4 இளைஞர்கள், இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி துஸ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ள மோசமான சம்பவம் நடந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நீதிபதி வில்லெம் கொர்னேலியஸ் மகள் ஹன்னா கொர்னேலியஸ் (21), பல்கலைகழகத்திலே சிறந்த மாணவியாக திகழ்ந்துள்ளார். இவருடைய அம்மா அன்னா (56) வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

ஹன்னா கடந்த மே மாதம் தன்னுடைய நண்பர் மார்ஷ் உடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென காரை மறித்த 3 நபர்கள், நண்பனுக்கு உதவி வேண்டும் என கூறியுள்ளனர். உடனே ஹன்னா கார் கண்ணாடியை திறந்துள்ளார்.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட அந்த நபர்கள் உடனே ஒரு கூர்மையான திருப்புளியை கொண்டு ஹன்னாவின் நெஞ்சு பகுதியில் வைத்து மிரட்டியுள்ளனர். அதே சமயம் மற்ற இரண்டு நபர்கள் கத்தியை கொண்டு மார்ஷின் முதுகு பகுதியில் வைத்து, ஹன்னாவை கொலை செய்துவிடுவதாக கூறியுள்ளனர்.

அதன் பின்னர் மார்ஷை காரின் பின்பக்கத்தில் உள்ள டிக்கியில் அடைத்து வைத்த அந்த நபர்கள், சாலையோரம் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் காரை நிறுத்தி மார்ஷை கடுமையாக தாக்கினர். அதில் ஒருவன் கல் ஒன்றினை எடுத்து மார்ஷின் காதுப்பகுதியில் ஓங்கி அடித்துள்ளான்.

இதில் அந்த இடத்தியிலேயே அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் மார்ஷ் மயங்கி விழுந்துள்ளான். பின்ன சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்ததும், மெதுவாக எழுந்து அருகாமையில் இருந்த வீட்டின் காலிங் பெல்லை அடித்துள்ளார். கதவை திறந்ததும் அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் நடந்த சம்பவம் குறித்து மார்ஷிடம் விசாரித்தனர். அதன்பேரில் ஹன்னாவின் உடலை 11 மைல் தூரத்தில் கண்டுபிடித்தனர். அவருடைய உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் வெர்னான் விட்பாய், 33, ஜெரால்டோ பார்சன்ஸ், 27, நாஷ்வில்லா ஜூலியஸ், 29, மற்றும் ஈபே வான் நியபேர்க், 28 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் ஹன்னாவில் தலையில் மிகப்பெரிய பாறாங்கல்லை கொண்டு தாக்கியதில் அவருடைய மண்டை ஓடு உடைந்திருந்ததும், அதன் பின்னர் அவர் கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இதனையடுத்து குற்றவாளிகளிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் 4 பேரும் போதைமருந்து உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கானது இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணையிக்கு வரவுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்