கள்ளத் தோணியில் சட்டவிரோதமாக நுழைந்த 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
224Shares

வங்கதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை கடல் மார்க்கமாக கள்ளத் தோணியில் இந்தியாவிற்கு அழைத்து வந்து பல மாநிலங்களில் வைத்து பாலியல் தொழில் செய்துவந்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வங்கதேசத்தை சேர்ந்த முஸ்கானா என்ற பெண்மணி, 16 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து கொண்டு கடந்த ஆண்டு இந்தியா வந்துள்ளார்.

ஒருவடமாக பாஸ்போர்ட் இல்லாமல் திருப்பூர், சென்னை, பெங்களூர், வேலூரில் தங்கியிருந்துள்ளார்.

முஸ்கானாவுக்கு கொல்கத்தாவில் உள்ள பாலியல் தொழில் செய்யும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அதில் உள்ள ஒருவர் மூலம் பெங்களூர், சென்னை, வேலூரில் பாலியல் கும்பல் உதவியுடன் தங்கியிருந்துள்ளார்.

இவர், இச்சிறுமியை அடித்து உதைத்து, கடந்த வருடமாக பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.

‘போக்சோ’ சட்டப் பிரிவில் முஸ்கானை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்