சுனாமியில் காணாமல்போன குழந்தை: பிணங்களுக்கு அடியிலிருந்து மீட்கப்பட்ட அதிசயம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இந்தோனேஷிய சுனாமியில் காணாமல் போன குழந்தை ஒன்று அதிசயிக்கத்தக்க வண்ணமாக 24 மணி நேரத்திற்குப்பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

மத்திய Sulawesi பகுதியைத் தாக்கிய சுனாமியில் குட்டிக் குழந்தை Wuhan (1) அடித்துச் செல்லப்பட்டாள்.

பெற்றோர் நம்பிகையிழந்துபோன நிலையில் காணாமல்போய் 24 மணி நேரத்திற்குப்பின் சேற்றில் புதைந்திருந்த இரண்டு சடலங்களுக்கு அடியில் அவள் கண்டுபிடிக்கப்பட்டாள்.

Wuhanஇன் தாயான Endang, குழந்தைக்கு கடவுள் கொடுத்த புதிய வாழ்வுக்காக நன்றி என்று கூறினார்.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் தாங்கள் வீடிழந்து எதிர்காலத்தைக் குறித்த கவலை ஏற்பட்டிருந்தாலும் தனது மகள் உயிருடன் கிடைத்ததற்காக நன்றியுடன் இருப்பதாக Endang தெரிவித்தார்.

Endangஇன் குழந்தைக்கு உணவளிப்பதற்காக அவருக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து இந்தோனேஷிய ராணுவம் மீட்புப் பணிக்காகவும், தண்ணீர், உணவு மற்றும் உடைகளை பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்காகவும் ஏராளமான ராணுவ வீரர்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மத்திய Sulawesiயை தாக்கிய நிலநடுக்கத்தால் உருவான சுனாமியால் 20 அடி உயர அலைகள் Paluவைத் தாக்கின.

1400பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000தை தொடலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers