கற்பழிக்கப்பட்டதாக புகார் அளித்த இளம்பெண்: விசாரணையில் அம்பலமான உண்மை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பேஸ்புக் வீடியோவில் போலி கற்பழிப்பு கூறி பரபரப்பை ஏற்படுத்திய எகிப்து பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டை சேர்ந்த இளம்பெண் தனது பேஸ்புக்கில் 12 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தான் ஒரு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் என்றும், தான் வங்கியில் பணிபுரிந்த போது பாலியல் கொடுமைக்கு ஆளானதாகவும், பல்வேறு பரபரப்பு தகவல்களை வெளியிட்டு இருந்தார்.

இது எகிப்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரணை நடத்தியதில், அவர் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் போலி என தெரியவந்தது.

இதையடுத்து இளம்பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இளம் பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் 140 நாட்கள் சிறை தண்டனையை ஏற்கெனவே அனுபவித்துவிட்டதால் எஞ்சிய நாட்களை சிறையில் கழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...