இந்தோனேசியாவில் 832 பேர் பலி! ஒரே இடத்தில் புதைக்கப்படும் சடலங்கள்...காப்பாற்றுங்கள் என அலறும் மக்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக இதுவரை 832 உயிரிழந்துள்ள நிலையில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் Palu நகரில் மட்டும் 821 பேர் இறந்துள்ளனர். Donggala நகரில் இதுவரை 11 பேர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

கொத்துகொத்தாக கைப்பற்றபடும் சடலங்கள் குவியலாக ஒரே இடத்தில் புதைக்கப்பட்டு வருகிறது.

Palu நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் பைப்புகள் உடைந்து போயுள்ளதால் குடிநீர் கிடைப்பதில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

நகரில் உள்ள பிரபல ரோரோ ஹொட்டல் இடிந்துவிழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியுள்ள 50 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

குறித்த ஹொட்டல் கட்டிடத்திலிருந்து மக்கள் கதறும் குரல் கேட்கிறது.

இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடோடோ Palu நகருக்கு தற்போது வந்துள்ள நிலையில் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...