500 பேர் பலி... குவியல் குவியலாக சடலங்கள்: இந்தோனேஷியாவில் லட்சக்கணக்கானவர்களின் நிலை என்ன?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், சுனாமியால் பலியானோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது.

இயற்கையின் கோரதாண்டவத்தால் பலு, டோங்காலா, மமுஜூ ஆகிய 3 நகரங்களை சுனாமி விழுங்கி உள்ளது.

டோங்காலாவில் இதுவரை மீட்புக்குழுவினரால் நுழைய முடியாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள லட்சக்கணக்கான மக்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவின் மத்தியப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளியாக பதிவானது. இந்த பூகம்பத்தால் பலு, டோங்காலா நகரங்கள் அதிர்ந்தன.

சில நிமிடங்களில் பலு கடற்கரை பகுதியில் சுமார் 18 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து சுனாமி பேரலை தாக்கியது.

இந்த பயங்கர பூகம்பத்தில் பலு நகரத்தில் மட்டுமே 500க்கும் மேற்பட்டோர் பலியானதாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 384 பேர் இறந்ததாகவும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திறந்தவெளி இடங்களிலும் சடலங்கள் குவியல் குவியலாக சிதறி கிடக்கின்றன. இடிபாடுகளிலும், சேறு, சகதிகளிலும் குழந்தைகளின் சடலத்துடன் பலர் கதறி அழும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பை காட்டிலும், சுனாமியால்தான் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கார்கள், கட்டிடங்கள், மரங்கள் என அனைத்தையும் வாரி சுருட்டி இழுத்துச் சென்றது சுனாமி. இந்த திகில் காட்சிகளை சிலர் உயரமான கட்டிடங்களில் இருந்து செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...