காதலருடன் கணவன் முன்பு சிக்கிய திருமணமான பெண்: அதன் பின்னர் நடந்த பகீர் சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் திருமணமான பெண் ஒருவர் தமது காதலருடன் கணவரிடமே சிக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த பெண் ஹொட்டலுக்கு செல்ல அழைத்த வாடகை டாக்ஸியின் சாரதியாக அவரது கணவரையே பார்த்த இருவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஏமி என மட்டுமே அடையாளம் தெரிவிக்கப்பட்டுள்ள அந்த பெண்மணியும் பாரியோஸ் என்ற நபருடன் கடந்த ஓராண்டு காலமாக ரகசிய தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

ஆனால் இருவரது ரகசிய தொடர்பும் இந்த வாரம் அந்த பெண்ணின் கணவரிடமே அம்பலமாகியுள்ளது.

செவ்வாய் அன்று ஏமி மற்றும் பாரியோஸ் ஆகிய இருவரும் Santa Marta நகரில் ரகசியமாக சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் ஹொட்டலுக்கு சென்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என கருதிய இருவரும், வாடகை டாக்ஸி ஒன்றை அழைத்துள்ளனர்.

ஏமியின் கணவர் தமது நண்பரின் டாக்ஸியை கடனாக பெற்று அன்றைய தினம் moonlight என்ற பெயரில் பணியாற்றி வந்துள்ளார்.

இது ஏமிக்கு தெரியாமல் போனது. வாடகை டாக்ஸிக்கான செயலியில் வேறு பெயர் தெரிந்ததும் இருவரும் அந்த டாக்ஸியை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனிடையே டாக்ஸியும் அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு வந்துள்ளது. இருவரும் டாக்ஸிக்குள் ஏறிய பின்னரே, அந்த டாக்ஸியின் சாரதி தமது கணவர் என குறித்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து இருவரும் டாக்ஸியை விட்டு வெளியேறி தப்பித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

வேறு சிலர், அந்த டாக்ஸி சாரதியும் பெண்ணின் காதலரும் சண்டையிட்டுக் கொண்டதாகவும் இருவேறு தகவல்களை தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்