இந்தோனேஷிய சுனாமியால் அடித்துச்சென்ற கடற்கரை திருவிழா: கடற்கரையிலும் கடல்நீரிலும் சடலங்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவின் சுலாவேஸி தீவில் ஏற்பட்ட சுனாமியினால் கடற்கரை விழாவில் பங்கேற்றிருந்த திரளான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தோனேஷியாவின் பலு நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி பேரலையில் சிக்கி இதுவரை 384 பேர் மரணமடைந்துள்ளதாகவும், சுமார் 540 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி கடற்கரை நகரமான Donggala கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், இதுவரை மீட்பு குழுவினரால் அந்த நகரத்தை சென்று சேர முடியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

டொங்காலாவில் பல உடல்கள் கடற்கரையில் சிதறிக்கிடந்தன. இப்பகுதில் மட்டும் பலி எண்ணிக்கை எத்தனை என்பது இன்னமும் தெரியவரவில்லை. இறந்தவர்களில் 56 பேர் அடையாளம் மட்டுமே தெரியவந்துள்ளது.

இதனிடையே இறப்பு விகிதம் அதிகரிக்க காரணமாக அமைந்தது பலு நகரில் ஏற்பாடு செய்திருந்த கடற்கரை திருவிழா என கூறுகின்றனர்.

பலு நகரின் ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறப்பு கடற்கரை திருவிழா ஒன்றை வெள்ளியன்று இரவு துவங்கியிருந்தனர்.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். எதிர்பாராதவிதமாக சுனாமி தாக்கியதில், இந்த விழாவில் கலந்துகொண்ட மக்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் இவர்களுக்கு பாதுகாப்பிற்காக வந்த 250 பொலிசாரும் சுனாமி பேரலையில் சிக்கி மாயமாகியுள்ளனர்.

மட்டுமின்றி சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் அரை மணி நேரத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டதும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதனால் சுனாமி பேரலைகளில் சிக்க நேர்ந்தது என தெரியவந்துள்ளது.

சுனாமி பேரலை தாக்கிய சில நிமிடங்களில் மரங்களில் ஏறி உயிர் தப்பியவர்களும் உள்ளனர். வெள்ளியன்று காலை மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில் 6.1 என்ற ரிக்டர் அளவில் முதல் பூகம்பம் தாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து 7.5 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே சுனாமி ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.

இந்தோனேசியா ‘பசிபிக் நெருப்பு வளையம்’ என்ற எரிமலைகளும் பெரும்பாறைப் பிளவுகளும் நிரம்பிய பகுதிக்குள் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers