இந்தோனேசியாவில் மீனவ கிராமத்தையே விழுங்கிய சுனாமி! திடுக்கிடும் தகவல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

384 பேரை பலி வாங்கிய சுனாமியால் ஒரு மீனவ கிராமமே காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட Donggala என்னும் மீனவ கிராமத்தின் நிலவரம் தெரியாததால் 600,000 பேர் வசிக்கும் Palu நகரில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் குறித்த முழுமையான தகவலைப் பெற இயலவில்லை.

நிலநடுக்க மையப்பகுதிக்கு மிக அருகில் இருக்கும் Donggala என்ன ஆனது என்பதைக் குறித்த எந்த தகவலையும் அறிய இயலவில்லை.

நிலநடுக்கமும் சுனாமியும் பெரும் மின் தடையை ஏற்படுத்தியுள்ளதால் எந்த தகவல் தொடர்புகளையும் மேற்கொள்ள இயலவில்லை.

இருள் காரணமாக இரவில் மீட்பு பணி மேற்கொள்வதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு போகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டபின், பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் எத்தனை பேர் வீடுகளிலேயே தங்கிவிட்டார்கள் என்பது தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers