என்னுடைய 1000 தம்பி தங்கைகளைத் தேடி கொண்டிருக்கிறேன்: சுவாரஸ்ய மனிதரின் கதை

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஐந்து ஆண்டுகளுக்குமுன் ஒருநாள், தன்னுடைய தந்தை தன் உண்மையான தந்தை அல்ல என்ற உண்மையை அறிந்த ஒரு நபர், தன்னுடைய உண்மையான தந்தையைத் தேடிக் கண்டுபிடித்ததுடன், தனக்கு சுமார் 1000 தம்பி தங்கைகள் இருப்பதையும் தெரிந்துகொண்டு அவர்களைத் தேடிக் கோண்டிருக்கிறார்.

Rotterdamஐச் சேர்ந்த Ivo van Halen ஐந்து ஆண்டுகளுக்குமுன் உயிரணு தான முறையில் தான் பிறந்ததை தெரிந்து கொண்டார்.

தன் உண்மையான தந்தை யார் என்பதை அறியும் ஆவல் அவருக்கு ஏற்பட்டது. உயிரணு தானம் வழங்கப்படும் இடங்களில், தானம் செய்தது யார் என்ற உண்மையை வெளியில் சொல்லமாட்டார்கள்.

எனவே Family Tree DNA என்னும் முறையில், அதாவது தந்தை மற்றும் உடன் பிறந்தோரின் DNA ஒற்றுமையை பயன்படுத்தி அவர் தனது தந்தையையும் தம்பி தங்கைகளையும் தேட ஆரம்பித்தார்.

இரண்டு மாதங்களில் அவர் தனது தந்தையையும் 42 தம்பி தங்கைகளையும் கண்டு பிடித்து விட்டார்.

தனது தந்தையை சந்திப்பதற்கு முதலில் பயந்தாலும், பின்னர் அவரை சந்தித்தபோது தங்களுக்குள் பல ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

தம்பி தங்கைகளைக் கண்டுபிடித்ததில் இரண்டு சுவாரஸ்யமான விடயங்கள் தெரியவந்தன.

ஒன்று அவர்களில் சிலர் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமாகியிருந்தார்கள். இன்னொன்று அவர்களில் சிலர் தங்கள் தம்பி தங்கை என்பது தெரியாமல் டேட்டிங் போக தொடங்கியிருந்தார்கள், Ivo van Halenஇன் முயற்சியால் அவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டார்கள்.

ஆனால் Ivo van Halen அத்துடன் திருப்தியடைந்து விடவில்லை. அவரது தந்தை சுமார் 1000 பேருக்கு உயிரணு தானம் செய்திருப்பது தெரிய வந்திருப்பதால், தன் 1000 தம்பி தங்கைகளையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers