இந்தோனேசியாவில் கம்பீரமாக நின்ற பிரம்மாண்ட பாலம்! சுனாமிக்கு பின் ஏற்பட்ட நிலை...அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பிரம்மாண்டமாக காட்சியளித்த பாலம் ஒன்று முற்றிலுமாக சேதமடைந்த வீடியோ வெளியாகியுள்ளது.

நாட்டின் சுலவேசி தீவின் டோங்காலா நகரில் நேற்று 7.5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதோடு சுனாமியும் ஏற்பட்டது.

இதில் இதுவரை 400 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுனாமி காரணமாக பல வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தது.

இந்நிலையில் அங்குள்ள ஒரு பிரம்மாண்டமான பாலம் சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் எவ்வளவு கம்பீரமாக காட்சியளித்தது மற்றும் சுனாமியின் கோரத்தாண்டவத்துக்கு பின்னர் எப்படி முற்றிலும் சேதமடைந்தது என்பதை காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் வானிலை செய்தியாளர் இது குறித்த வீடியோவை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

வீடியோவை காண

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers