இந்தோனேசியாவை புரட்டி போட்ட சுனாமி.. எங்கும் சடலங்கள்: பலி எண்ணிக்கை 384 ஆக உயர்வு

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் 384 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் டோங்காலா நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதலில் 6.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம், அடுத்ததாக மத்திய பகுதியில் 7.5 ஆக பதிவானது.

அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, திரும்ப பெறப்பட்டது.

எனினும் சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது, இதில் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன, பலரை சுனாமி அடித்துச் சென்றது.

இந்நிலையில் சுனாமியின் கோரத் தாண்டவத்தால் 384 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பலரும் காணாமல் போயுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே சுனாமி தாக்கிய போது எழுந்த ராட்சத அலைகள் தொடர்பான வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers