5 அடி உயரத்தில் வந்த சுனாமி பேரலைகள்! கதறும் உறவுகள்.. இந்தோனேசியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம் மற்றும் சுனாமியால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sulawesi தீவில் நேற்று 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் Palu மற்றும் Donggala நகரில் 5 அடி உயரத்தில் சுனாமி பேரலைகள் ஏற்பட்டன.

இதன் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர், இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதன் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்புக்குழுவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், Palu நகர் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளதால் அதிக விவரங்களை சேகரிக்க கடினமாக உள்ளது

தண்ணீரில் வீடுகள் அடித்து செல்லப்பட்டதோடு, பல குடும்பங்கள் காணாமல் போயுள்ளது.

தகவல் தொடர்பு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால் சிரமம் ஏற்பட்டுள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவியை வழங்க ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவோம் என கூறியுள்ளார்.

இறந்தவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் அழுது கொண்டிருப்பதை காணமுடிவதோடு, காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அவர்களை தேடி தவிக்கும் காட்சிகளையும் ஆங்காங்கே காணமுடிகிறது.

காயமடைந்தவர்கள் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

Paluவில் உள்ள விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.

தற்போது மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers