6,000 பெண்களுடன் பாலியல் உறவு: உலகையே உற்றுநோக்க வைத்த காதல் மன்னனுக்கு நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இத்தாலியின் ரிமினி நகரில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் வகையில் சுமார் 6,000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட காதல் மன்னன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

ரிமினியின் ரோமியோ என அழைக்கப்படும் 63 வயதான Maurizio Zanfanti என்பவரே மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

இவர் இத்தாலியின் கடற்கரை நகரமான ரிமினியில் 1970 காலகட்டங்களில் இரவு விடுதிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் பெரும்பங்காற்றியதாக கூறப்படுகிறது.

இதற்கென இவர் சுமார் 6,000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

செவ்வாய் அன்று இரவு ருமேனியா நாட்டு சுற்றுலாப்பயணியான 23 வயது இளம் பெண் ஒருவருடன் கார் ஒன்றில் உறவில் ஈடுபட்டிருக்கும்போது Maurizio-கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக குறித்த ருமேனியா இளம் பெண் மருத்துவ உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினரால் Maurizio உயிரை காப்பாற்ற முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலி நாட்டவர்களால் மதிப்பு மிக்க காதலன் என அறியப்படும் Maurizio-ன் கடைசி ஆசையும் இதுவாகத்தான் இருந்தது என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

காதலில் ஈடும்படும்போதே மரணமடைய வேண்டும் என தற்போது 63 வயதாகும் Maurizio அடிக்கடி கூறிவந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இரவுகளின் காதலனை ரிமினி நகரம் இழந்துவிட்டதாக அந்த நகரின் மேயர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1972 ஆம் ஆண்டு தமது 17-வது வயதில் Maurizio இரவு விடுதி ஒன்றில் முதன் முறையாக பணிக்கு சேர்ந்துள்ளார்.

ஜேர்மனி மற்றும் ஸ்காண்டிநேவிய சுற்றுலா பயணிகளை தமது பேச்சுத்திறமையால் இரவு விடுதிகளுக்கு அழைத்து வருவதே தொடக்கத்தில் இவர் செய்து வந்த பணி.

அதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்ற Maurizio, ஒரு கோடை காலத்தில் சுமார் 200 பெண்களுடன் உறவில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

பெண்களை வசீகரிக்கும் இவரது திறமையால் இத்தாலியின் மிகவும் பெருமைக்குரிய காதலன் என 1986-ல் உள்ளூர் பத்திரிகைகளால் பாராட்டப்பட்டார்.

1980 காலகட்டத்தில் இவருடன் உறவு கொண்ட ஸ்வீடன் பெண்கள் சிலர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் இவரை சந்தித்தது பத்திரிகைகளில் தலைப்பானது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers