உள்ளாடை பேஷன் ஷோவில் ஒய்யார நடைபோட்ட நிறைமாத கர்ப்பிணி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

நியூயோர்க்கில் உள்ளாடை பேஷன் ஷோவில் கலந்துகொண்ட நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

பேஷன் ஷோவில் நடைபோட்ட மாடல், உடனடியாக பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

கர்ப்பிணி மொடலான ஸ்லிக் வுட்ஸ் என்ற பெண்மணி, பேஷன் வீக்கில் ரிஹான்னா சாவேஜ் எக்ஸ் பெண்டி உள்ளாடை ஷோவில் கலந்து கொண்டார்.

இதற்காக கருப்பு நிற உள்ளாடையை அணிந்து கொண்டு, பேஷன் ஷோவில் ஒய்யார நடை நடந்தார். இது பேஷன் வீக்கின் நிறைவு நிகழ்ச்சியாக புரோக்கிலினில் நடைபெற்றது.

பேஷன் ஷோவில் கலந்து கொண்ட போது பிரசவ வலி ஏற்பட்டது . நேராக பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தைக்கு சபிர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்