துப்பாக்கி சோதனையின் போது நேர்ந்த சோகம்: துடிதுடித்து இறந்த இளைஞரின் வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

உக்ரைனில் தோட்டா துளைக்காத ஆடையினை சோதனை செய்து பார்த்த போது, இளைஞர் ஒருவர் துடிதுடித்து உயிரிழக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கிழக்கு உக்ரைனில் Donbass மாகாணத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு சோதனை செய்வதை போலவும், அதில் அவர் துடிதுடித்து இறப்பதை போன்ற வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள Domovoi என்ற இளைஞர், தான் அணிந்திருக்கும் துப்பாக்கி துளைக்காத ஆடையினை சோதனை செய்யும் விதமாக கையில் வைத்திருக்கும் துப்பாக்கியை கொண்டு சுட்டுக்கொள்கிறார்.

வீடியோ இணைப்பு

அடுத்த நொடியே பேச்சு ஏதுமின்றி தரையில் மெதுவாக அமர முயற்சி செய்கிறார். இதனை வீடியோவாக பதிவு செய்துகொண்டிருந்த சக நண்பர்கள், நீ காயமடைந்துவிட்டாயா? என ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டே, நீ செத்துக்கொண்டிருக்கிறாயா? என கேட்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு பதில் கொடுக்க முடியாத அந்த இளைஞர் மெதுவாக அந்த ஆடையினை கழற்றுகிறார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் அடுத்த சில மணி நேரங்களில் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து ராணுவ அதிகாரி கூறுகையில், சம்மந்தப்பட்ட நபர் துப்பாக்கியை மிகவும் அருகில் வைத்துக்கொண்டு சோதனை மேற்கொண்டதால் தான் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. தோட்டாவினால் ஆடையை ஊடுருவ முடியவில்லை என்றாலும் அதன் வேகம் உடலுறுப்புகளை பதம் பார்த்துவிடும் என விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்