மனநோய் வியாதிக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் வைத்தியர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்

தற்போது இங்கிலாந்தில் பல வைத்தியர்கள் தமக்கான உதவிகள் கிடைக்காது மனநோய் வியாதிக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

இத்தற்கொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2011 மற்றும் 2015 இற்கிடைப்பட்ட காலப்பகுதியில் மொத்தம் 430 வைத்தியர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக வைத்தியர் Clare Gerada கூறுகையில்,

வைத்தியர்கள் தற்போது நம்பமுடியாத அளவுக்கு மனநிலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிலும் பெண் வைத்தியர்கள் ஒரு சாதாரண குடிமகனிலும் பார்க்க 4 மடங்கு மன வியாதிகளால் அவதிப்படுவதாக தெரிவிக்கின்றார்.

கடந்த 10 வருடங்களில் மொத்தம் 5,000 வைத்தியர்கள் மேற்படி நோய் நிலைமைக்கென சிகிச்சையளிக்கப்பட்டிருந்தனர்.

இதில் மூன்றில் இரு பகுதிக்கும் மேலானோர் பெண் வைத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்